சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.046   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   குண்டைக் குறள் பூதம் குழும,
பண் - தக்கராகம்   (திருவதிகை வீரட்டானம் அதிகைநாதர் (எ) வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=WiDBNDKsRBw
4.001   திருநாவுக்கரசர்   தேவாரம்   கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்- கொடுமைபல
பண் - கொல்லி   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=MKE6sESuM58
4.002   திருநாவுக்கரசர்   தேவாரம்   சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த்
பண் - காந்தாரம்   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.010   திருநாவுக்கரசர்   தேவாரம்   முளைக்கதிர் இளம் பிறை மூழ்க,
பண் - காந்தாரம்   (திருவதிகை வீரட்டானம் )
Audio: https://www.youtube.com/watch?v=pulAH9fYBx8
4.024   திருநாவுக்கரசர்   தேவாரம்   இரும்பு கொப்பளித்த யானை ஈர்
பண் - கொப்பளித்ததிருநேரிசை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.025   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெண் நிலா மதியம் தன்னை
பண் - திருநேரிசை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=hgguAts3gN8
4.026   திருநாவுக்கரசர்   தேவாரம்   நம்பனே! எங்கள் கோவே! நாதனே!
பண் - திருநேரிசை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=usvkGu_xksU
4.027   திருநாவுக்கரசர்   தேவாரம்   மடக்கினார்; புலியின்தோலை; மா மணி
பண் - திருநேரிசை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=YUJRfd3R5eI
4.028   திருநாவுக்கரசர்   தேவாரம்   முன்பு எலாம் இளைய காலம்
பண் - திருநேரிசை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.104   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாசு இல் ஒள்வாள் போல்
பண் - திருவிருத்தம்   (திருவதிகை வீரட்டானம் காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=-I3U494sOPI
5.053   திருநாவுக்கரசர்   தேவாரம்   கோணல் மா மதி சூடி,
பண் - திருக்குறுந்தொகை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=orTB0gkFolM
5.054   திருநாவுக்கரசர்   தேவாரம்   எட்டு நாள்மலர் கொண்டு, அவன்
பண் - திருக்குறுந்தொகை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=Viq0DdV_HhQ
6.003   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை,
பண் - ஏழைத்திருத்தாண்டகம்   (திருவதிகை வீரட்டானம் )
Audio: https://www.youtube.com/watch?v=cKBYEE8irqE
6.004   திருநாவுக்கரசர்   தேவாரம்   சந்திரனை மா கங்கைத் திரையால்
பண் - அடையாளத்திருத்தாண்டகம்   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=Fhn2zaa0d8g
6.005   திருநாவுக்கரசர்   தேவாரம்   எல்லாம் சிவன் என்ன நின்றாய்,
பண் - போற்றித்திருத்தாண்டகம்   (திருவதிகை வீரட்டானம் )
Audio: https://www.youtube.com/watch?v=heBfq8uMYc0
6.006   திருநாவுக்கரசர்   தேவாரம்   அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்)
பண் - குறிஞ்சி   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=EudEaUvuF4k
6.007   திருநாவுக்கரசர்   தேவாரம்   செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
பண் - காப்புத்திருத்தாண்டகம்   (திருவதிகை வீரட்டானம் )
Audio: https://www.youtube.com/watch?v=R_eoKaUD4Cs
7.038   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தம்மானை அறியாத சாதியார் உளரே?
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=fsTkXgqkqbY
Audio: https://www.youtube.com/watch?v=r1DQ7uTccCE

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.046   குண்டைக் குறள் பூதம் குழும,  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு அதிகைநாதர் (எ) வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
குண்டைக் குறள் பூதம் குழும, அனல் ஏந்தி,
கெண்டை பிறழ் தெண் நீர்க் கெடில வடபக்கம்,
வண்டு மருள் பாட, வளர் பொன் விரி கொன்றை
விண்ட தொடையலான் ஆடும், வீரட்டானத்தே.

[1]
அரும்பும் குரும்பையும் அலைத்த மென் கொங்கைக்
கரும்பு இன்மொழியாளோடு உடன் கை அனல் வீசி,
சுரும்பு உண் விரிகொன்றைச் சுடர் பொன் சடை தாழ,
விரும்பும் அதிகையுள் ஆடும், வீரட்டானத்தே.

[2]
ஆடல் அழல் நாகம் அரைக்கு இட்டு அசைத்து ஆட,
பாடல் மறை வல்லான் படுதம் பலி பெயர்வான்,
மாட முகட்டின் மேல் மதி தோய் அதிகையுள்,
வேடம் பல வல்லான் ஆடும், வீரட்டானத்தே.

[3]
எண்ணார் எயில் எய்தான்; இறைவன்; அனல் ஏந்தி;
மண் ஆர் முழவு அதிர, முதிரா மதி சூடி,
பண் ஆர் மறை பாட, பரமன்-அதிகையுள்,
விண்ணோர் பரவ, நின்று ஆடும், வீரட்டானத்தே.

[4]
கரிபுன்புறம் ஆய கழிந்தார் இடுகாட்டில்,
திரு நின்று ஒரு கையால், திரு ஆம் அதிகையுள்,
எரி ஏந்திய பெருமான், எரிபுன் சடை தாழ,
விரியும் புனல் சூடி, ஆடும், வீரட்டானத்தே.

[5]
துளங்கும் சுடர் அங்கைத் துதைய விளையாடி,
இளங்கொம்பு அன சாயல் உமையோடு இசை பாடி,
வளம் கொள் புனல் சூழ்ந்த வயல் ஆர் அதிகையுள்,
விளங்கும் பிறைசூடி ஆடும், வீரட்டானத்தே.

[6]
பாதம் பலர் ஏத்த, பரமன், பரமேட்டி
தம் புடை சூழ, புலித்தோல் உடை ஆக,
கீதம் உமை பாட, கெடில வடபக்கம்,
வேத முதல்வன் நின்று ஆடும், வீரட்டானத்தே.

[7]
கல் ஆர் வரை அரக்கன் தடந்தோள் கவின் வாட,
ஒல்லை அடர்த்து, அவனுக்கு அருள்செய்து, அதிகையுள்,
பல் ஆர் பகுவாய நகு வெண்தலை சூடி,
வில்லால் எயில் எய்தான் ஆடும், வீரட்டானத்தே.

[8]
நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்;
பொடி ஆடு மார்பானை, புரிநூல் உடையானை,
கடி ஆர் கழு நீலம் மலரும் அதிகையுள்,
வெடி ஆர் தலை ஏந்தி, ஆடும், வீரட்டானத்தே.

[9]
அரையோடு அலர் பிண்டி மருவிக் குண்டிகை
சுரை ஓடு உடன் ஏந்தி, உடை விட்டு உழல்வார்கள்
உரையோடு உரை ஒவ்வாது; உமையோடு உடன் ஆகி,
விரை தோய் அலர்தாரான் ஆடும், வீரட்டானத்தே.

[10]
ஞாழல் கமழ் காழியுள் ஞானசம்பந்தன்,
வேழம் பொரு தெண் நீர் அதிகை வீரட்டானத்துச்
சூழும் கழலானைச் சொன்ன தமிழ்மாலை,
வாழும் துணை ஆக நினைவார் வினை இலாரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.001   கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்- கொடுமைபல  
பண் - கொல்லி   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
மருள்நீக்கியார், தனது சிறுவயதில் பெற்றோர்கள் இருவரையும் இழந்தார். மருள்நீக்கியாரின் சகோதரி திலகவதியார் ஆதரவாக இருந்தார். வாழ்க்கையில் பிடிப்பு ஏதும் இல்லாத நிலையில் சமண சமயத்துக் கொள்கைகள் அவரை ஈர்த்தன. சமண சமயக் கொள்கைகளை எளிதில் கற்றுத் தேர்ந்த மருள்நீக்கியார், சமணர்களின் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டு தருமசேனர் என்று அழைக்கப்பட்டு கடலூரை அடுத்துள்ள பாடலிபுத்திரத்தில் வாழ்ந்து வந்தார். ஒரு கட்டதில், தருமசேனருக்கு கொடிய சூலைநோய் ஏற்பட்டது. கடுமையான வயிற்று வலியால் துடித்த அவருக்கு சமண சமய மந்திரங்களும் தந்திரங்களும், மற்ற மருத்துவமும் பலன் ஏதும் அளிக்கவில்லை. சமணர்கள் செய்த மருத்துவங்கள் மந்திரங்கள் ஏதும் பலனளிக்காத நிலையில், இரவோடு இரவாக யாரும் அறியாமல் தமது தமக்கையார் இருக்கும் திருவதிகை சென்றார். திலகவதியார், சிவபிரானின் கழல்களை வணங்கி அவருக்கு பணி செய்து உய்யலாம் என்று கூறித் தேற்றி, நமச்சிவாய என்ற மந்திரத்தை ஓதி அவருக்கு திருநீறு அளித்தார். திருக்கோயிலை வலம் வந்த மருள்நீக்கியார், தரையில் விழுந்து பெருமானை வணங்கிய பின்னர் அவரது சன்னதியில் நின்று கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தை பாடினார்.
இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ வயிற்று வலி, குடல் தொடர்பான அனைத்து தொல்லைகள் நீங்கும்
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-
கொடுமைபல செய்தன நான் அறியேன்;
ஏற்றாய்! அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட,
ஆற்றேன், அடியேன்:-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[1]
நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன்;
நினையாது ஒருபோதும் இருந்து அறியேன்;
வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன்;
வயிற்றோடு துடக்கி முடக்கியிட,
நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
அஞ்சேலும்! என்னீர்-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[2]
பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்!
படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர்
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்,
சுடுகின்றதுசூலை தவிர்த்து அருளீர்
பிணிந்தார் பொடி கொண்டு மெய் பூச வல்லீர்!
பெற்றம் ஏற்று உகந்தீர்! சுற்றும் வெண் தலை  கொண்டு
அணிந்தீர்! அடிகேள்! அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[3]
முன்னம், அடியேன் அறியாமையினால்
முனிந்து, என்னை நலிந்து முடக்கியிடப்,
பின்னை, அடியேன் உமக்கு ஆளும் பட்டேன்;
சுடு கின்றது சூலை தவிர்த்து அருளீர்
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பது அன்றோ,
தலைஆயவர் தம் கடன் ஆவதுதான்?
அன்ன நடையார் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[4]
காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால்,
கரை நின்றவர், கண்டுகொள்! என்று சொல்லி,
நீத்து ஆய கயம் புக நூக்கியிட,
நிலைக் கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன்;
வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன்;
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்-புனல் ஆர் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[5]
சலம், பூவொடு, தூபம், மறந்து அறியேன்;
தமிழோடு இசைபாடல்மறந்து அறியேன்;
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன்;
உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன்;
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய்!
உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய்!
அலந்தேன், அடியேன்;-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[6]
உயர்ந்தேன், மனை வாழ்க்கையும் ஒண் பொருளும்,
ஒருவர் தலை காவல் இலாமையினால்;
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்,
வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர்
பயந்தே என் வயிற்றின் அகம்படியே
பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட, நான்
அயர்ந்தேன், அடியேன்;-அதிகைக்கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[7]
வலித்தேன் மனை வாழ்க்கை, மகிழ்ந்து அடியேன்,
வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்;
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை;
சங்கவெண் குழைக் காது உடை எம்பெருமான்!
கலித்தே என் வயிற்றின் அகம்படியே
கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன,
அலுத்தேன், அடியேன்;-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[8]
பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர்!
புரி புன் சடையீர்! மெலியும் பிறையீர்
துன்பே, கவலை, பிணி, என்று இவற்றை
நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
என்போலிகள் உம்மை இனித் தெளியார்,
அடியார் படுவது இதுவே ஆகில்;
அன்பே அமையும்-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[9]
போர்த்தாய், அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி-தோல்!
புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய்!
ஆர்த்தான் அரக்கன் தனை மால் வரைக் கீழ்
அடர்த்திட்டு, அருள் செய்த அது கருதாய்;
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்,
என் வேதனை ஆன விலக்கியிடாய்-
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.002   சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த்  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
பிறகு சமணர்கள் ஒன்றுகூடி மன்னனிடம் சென்று நம் சமயச் சார்பில் பெற்ற சாதகத்தால் இவன் சாவாது பிழைத்திருக்கின்றான், இனி விடம் ஊட்டுவதே தரத்தக்க தண்டனை என்று கூறினர். அரசனும் இசைந்தனன். கொலை பாதகத்திற்கும் அஞ்சாத அக்கொடி யோர் விடங்கலந்த பாற்சோற்றைத் திருநாவுக்கரசர்க்கு அளித்து உண்ணும்படிச் செய்தனர். எம்பிரான் அடியார்க்கு நஞ்சும் அமுதாம் என்றுகூறி அதை உண்டு எவ்விதத் தீங்கும் அடையாமல் விளங்கினார் அடிகள். திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகாலவிடம் சிவபெரு மானுக்கு அமுதமாக ஆயிற்று. அவனடியார்க்கு நஞ்சு அமுதாயிற்று. நஞ்சும் இவனுக்கு அமுதாயிற்று. இவன் பிழைப்பானாகில் இனி, நமக்கு இறுதி வருவது உறுதி என்றெண்ணி முன்போல் அரசன் பாற் சென்று நம் சமயத்திற் கற்ற மந்திர வலிமையால் உயிர் பிழைத் தான், அவன் இறவாதிருந்தால் எங்கள் உயிரும் நும் அரசாட்சியும் அழிவது திண்ணம், என்று கூறினர். மத யானையை விடுத்து இடறச் செய்வதே தண்டனை என்று தீர்மானிக்கப்பெற்றது. குன்றுபோல் விளங்கிய மதயானை கூடத்தை விட்டுப் புறப்பட்டது. பயங்கரமான அந்த யானை திருநாவுக்கரசரை இன்று காலால் இடறிச் சிதறிவிடும் என்றே எல்லோரும் எண்ணினர். திருநாவுக்கரசர் சுண்ணவெண் சந்தனச்சாந்தும் என்று தொடங்கித் திருப்பதிகம்பாடி யானையுரித்த பிரான் கழல்போற்றியிருந்தார். மதயானை மும்முறை வலம்வந்து வீழ்ந்து வணங்கித் தன்னை ஏவிய பாகரையும் சமணரையும் மிதித்துக் கொன்று சென்றது.
அபாயகரமான விஷங்கள், விஷ உணவு இவற்றின் இருந்து தப்பிக்க
சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த் திங்கள் சூளாமணியும்,
வண்ண இரிவை உடையும், வளரும் பவள நிறமும்,
அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும்,
திண்ணென் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

[1]
பூண்டது ஒர் கேழல் எயிறும், பொன் திகழ் ஆமை புரள,
நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலாக் கதிர் போல வெண் நூலும்,
காண் தகு புள்ளின் சிறகும், கலந்த கட்டங்கக் கொடியும்,
ஈண்டு கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

[2]
ஒத்த வடத்து இள நாகம் உருத்திர பட்டம் இரண்டும்,
முத்துவடக் கண்டிகையும், முளைத்து, எழு மூ இலை வேலும்,
சித்த வடமும், அதிகைச் சேண் உயர் வீரட்டம் சூழ்ந்து
தத்தும் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை



[3]
மடமான் மறி, பொன் கலையும், மழு, பாம்பு, ஒரு கையில் வீணை,
குடமால் வரைய திண் தோளும், குனி சிலைக் கூத்தின் பயில்வும்,
இடம் மால் தழுவிய பாகம், இரு நிலன் ஏற்ற சுவடும்,
தடம் ஆர் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.



[4]
பலபல காமத்தர் ஆகிப் பதைத்து எழுவார் மனத்துள்ளே
கலமலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும்,
வலம் ஏந்து இரண்டு சுடரும், வான் கயிலாயமலையும்,
நலம் ஆர் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!
அஞ்சுவது யாதென்றும் இல்லை: அஞ்ச வருவதும் இல்லை.



[5]
கரந்தன கொள்ளி விளக்கும், கறங்கு துடியின் முழக்கும்,
பரந்த பதினெண் கணமும், பயின்று அறியாதன பாட்டும்,
அரங்கு இடை நூல் அறிவாளர் அறியப்படாதது ஒர் கூத்தும்,
நிரந்த கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.



[6]
கொலை வரி வேங்கை அதளும், குலவோடு இலங்கு பொன் தோடும்,
விலை பெறு சங்கக் குழையும், விலை இல் கபாலக் கலனும்,
மலைமகள் கைக்கொண்ட மார்பும், மணி ஆர்ந்து இலங்கு மிடறும்,
உலவு கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.



[7]
ஆடல் புரிந்த நிலையும், அரையில் அசைத்த அரவும்,
பாடல் பயின்ற பல் பூதம், பல் ஆயிரம் கொள் கருவி
நாடற்கு அரியது ஒர் கூத்தும், நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து
ஓடும் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

[8]
நரம்பு எழு கைகள் பிடித்து, நங்கை நடுங்க, மலையை
உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும் ஒன்றும் அலற,
வரங்கள் கொடுத்து அருள் செய்வான், வளர் பொழில் வீரட்டம் சூழ்ந்து
நிரம்பு கெடிலப்புனலும் உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

[9]
சூழும் அரவத்துகிலும், துகில் கிழி கோவணக்கீளும்,
யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அரு வரை போன்ற
வேழம் உரித்த நிலையும், விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து
தாழும் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.010   முளைக்கதிர் இளம் பிறை மூழ்க,  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
முளைக்கதிர் இளம் பிறை மூழ்க, வெள்ள நீா
வளைத்து எழு சடையினர்; மழலை வீணையர்;
திளைத்தது ஓர் மான் மறிக் கையர்-செய்ய பொன்
கிளைத்துழித் தோன்றிடும் கெடில வாணரே.

[1]
ஏறினர், ஏறினை; ஏழை தன் ஒரு-
கூறினர்; கூறினர், வேதம்; அங்கமும்
ஆறினர்; ஆறு இடு சடையர்; பக்கமும்
கீறின உடையினர்-கெடில வாணரே.

[2]
விடம் திகழ் கெழு தரு மிடற்றர்; வெள்ளை நீறு
உடம்பு அழகு எழுதுவர்-முழுதும் வெண் நிலாப்
படர்ந்து அழகு எழுதரு சடையில் பாய்புனல்
கிடந்து அழகு எழுதிய கெடில வாணரே.

[3]
விழும் மணி அயில் எயிற்று அம்பு, வெய்யது ஓர்
கொழு மணி நெடுவரை கொளுவிக் கோட்டினார்
செழு மணிமிடற்றினர்; செய்யர்; வெய்யது ஓர்
கெழு மணி அரவினர்-கெடில வாணரே.

[4]
குழுவினர் தொழுது எழும் அடியர்மேல் வினை
தழுவின கழுவுவர், பவள மேனியர்,
மழுவினர், மான் மறிக் கையர், மங்கையைக்
கெழுவின யோகினர்-கெடில வாணரே.

[5]
அங்கையில் அனல்-எரி ஏந்தி, ஆறு எனும்
மங்கையைச் சடை இடை மணப்பர்; மால்வரை-
நங்கையைப் பாகமும் நயப்பர்-தென் திசைக்
கெங்கை அது எனப்படும் கெடில வாணரே.

[6]
கழிந்தவர் தலை கலன் ஏந்தி, காடு உறைந்து
இழிந்தவர் ஒருவர்! என்று எள்க, வாழ்பவர்-
வழிந்து இழி மதுகரம் மிழற்ற, மந்திகள்
கிழிந்த தேன் நுகர் தரும் கெடில வாணரே.

[7]
கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேது உற,
கிடந்த பாம்பு அவளை ஓர் மயில் என்று ஐயுற,
கிடந்த நீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே,
கிடந்து தான் நகுதலைக் கெடில வாணரே.

[8]
வெறி உறு விரிசடை புரள வீசி, ஓர்
பொறி உறு புலி உரி அரையது ஆகவும்,
நெறி உறு குழல் உமை பாகம் ஆகவும்,
கிறி பட உழிதர்வர்-கெடில வாணரே!

[9]
பூண்ட தேர் அரக்கனை, பொரு இல் மால்வரைத்
தூண்டு தோள் அவை பட, அடர்த்த தாளினார்
ஈண்டு நீர்க் கமலவாய், மேதி பாய் தர,
கீண்டு தேன் சொரிதரும் கெடில வாணரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.024   இரும்பு கொப்பளித்த யானை ஈர்  
பண் - கொப்பளித்ததிருநேரிசை   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
இரும்பு கொப்பளித்த யானை ஈர் உரி போர்த்த ஈசன்
கரும்பு கொப்பளித்த இன் சொல் காரிகை பாகம் ஆக,
சுரும்பு கொப்பளித்த கங்கைத் துவலை நீர் சடையில் ஏற்ற,
அரும்பு கொப்பளித்த சென்னி, அதிகை வீரட்டனாரே.

[1]
கொம்பு கொப்பளித்த திங்கள் கோணல் வெண் பிறையும் சூடி,
வம்பு கொப்பளித்த கொன்றை வளர் சடை மேலும் வைத்து,
செம்பு கொப்பளித்த மூன்று மதில் உடன் சுருங்க, வாங்கி
அம்பு கொப்பளிக்க எய்தார்-அதிகைவீரட்டனாரே

[2]
விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவி ஏத்த,
சடையும் கொப்பளித்த திங்கள், சாந்தம் வெண் நீறு பூசி,
உடையும் கொப்பளித்த நாகம், உள்குவார் உள்ளத்து என்றும்
அடையும் கொப்பளித்த சீரார்-அதிகை வீரட்டனாரே.

[3]
கறையும் கொப்பளித்த கண்டர்; காமவேள் உருவம் மங்க
இறையும் கொப்பளித்த கண்ணார்; ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
மறையும் கொப்பளித்த நாவர்-வண்டு பண் பாடும் கொன்றை
அறையும் கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே.

[4]
நீறு கொப்பளித்த மார்பர்-நிழல் திகழ் மழு ஒன்று ஏந்தி,
கூறு கொப்பளித்த கோதை கோல் வளை மாது ஓர் பாகம்,
ஏறு கொப்பளித்த பாதம் இமையவர் பரவி ஏத்த,
ஆறு கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே.

[5]
வணங்கு கொப்பளித்த பாதம் வானவர் மருவி ஏத்த,
பிணங்கு கொப்பளித்த சென்னிச் சடை உடைப் பெருமை அண்ணல்-
சுணங்கு கொப்பளித்த கொங்கைச் சுரி குழல் பாகம் ஆக,
அணங்கு கொப்பளித்த மேனி அதிகைவீரட்டனாரே.

[6]
சூலம் கொப்பளித்த கையர்; சுடர்விடு மழுவாள் வீசி,
நூலும் கொப்பளித்த மார்பில் நுண் பொறி அரவம் சேர்த்தி,
மாலும் கொப்பளித்த பாகர்-வண்டு பண் பாடும் கொன்றை,
ஆலம் கொப்பளித்த கண்டத்து அதிகைவீரட்டனாரே.

[7]
நாகம் கொப்பளித்த கையர்; நால்மறை ஆய பாடி
மேகம் கொப்பளித்த திங்கள் விரிசடைமேலும் வைத்து,
பாகம் கொப்பளித்த மாதர் பண் உடன் பாடி ஆட,
ஆகம் கொப்பளித்த தோளார்-அதிகைவீரட்டனாரே.

[8]
பரவு கொப்பளித்த பாடல் பண் உடன் பத்தர் ஏத்த,
விரவு கொப்பளித்த கங்கை விரிசடை மேவ வைத்து(வ்),
இரவு கொப்பளித்த கண்டர்; ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
அரவு கொப்பளித்த கையர்-அதிகைவீரட்டனாரே.

[9]
தொண்டை கொப்பளித்த செவ்வாய், துடி இடை, பரவைஅல்குல்,
கொண்டை கொப்பளித்த கோதை, கோல்வளை பாகம் ஆக-
வண்டு கொப்பளித்த தீம்தேன் வரிக்கயல் பருகி மாந்தக்
கெண்டை கொப்பளித்த தெண் நீர்க் கெடில வீரட்டனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.025   வெண் நிலா மதியம் தன்னை  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
வெண் நிலா மதியம் தன்னை விரிசடை மேவ வைத்து(வ்)
உள்-நிலாப் புகுந்து நின்று, அங்கு உணர்வினுக்கு உணரக் கூறி,
விண் இலார்; மீயச்சூரார்; வேண்டுவார் வேண்டுவார்க்கே
அண்ணியார்; பெரிதும் சேயார்-அதிகை வீரட்டனாரே.

[1]
பாடினார், மறைகள் நான்கும்; பாய் இருள், புகுந்து என் உள்ளம்
கூடினார்; கூடல் ஆலவாயிலார்; நல்ல கொன்றை
சூடினார்; சூடல் மேவிச் சூழ் சுடர் சுடலை வெண் நீறு-
ஆடினார்; ஆடல் மேவி;-அதிகைவீரட்டனாரே.

[2]
ஊனையே கழிக்க வேண்டில் உணர்மின்கள், உள்ளத்து
தேன் ஐய மலர்கள் கொண்டு சிந்தையுள் சிந்திக்கின்ற
ஏனைய பலவும் ஆகி, இமையவர் ஏத்த நின்று(வ்)
ஆனையின் உரிவை போர்த்தார்-அதிகைவீரட்டனாரே.

[3]
துருத்தி ஆம் குரம்பைதன்னில்-தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று,
விருத்தி தான் தருக! என்று வேதனை பலவும் செய்ய,
வருத்தியால்; வல்ல ஆறு வந்துவந்து அடைய நின்ற
அருத்தியார்க்கு அன்பர் போலும்-அதிகை வீரட்டனாரே.

[4]
பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்
துத்திஐந்தலையநாகம் சூழ் சடைமுடி மேல் வைத்து (வ்),
உத்தர மலையர் பாவை உமையவள் நடுங்க அன்று(வ்)
அத்தியின் உரிவை போர்த்தார்-அதிகைவீரட்டனாரே.

[5]
வரிமுரி பாடி என்றும் வல்ல ஆறு அடைதும், -நெஞ்சே!-
கரி உரி மூடவல்ல கடவுளைக் காலத்தாலே;
சுரிபுரிவிரிகுழ(ல்) லாள், துடி இடைப் பரவை அல்குல்
அரிவை, ஒர் பாகர்போலும்- அதிகை வீரட்டனாரே.

[6]
நீதியால் நினைசெய்,-நெஞ்சே!-நிமலனை, நித்தம் ஆக;
பாதி ஆம் உமை தன்னோடும் பாகம் ஆய் நின்ற எந்தை,
சோதியா சுடர் விளக்கு ஆய்ச் சுண்ண வெண் நீறு அது ஆடி
ஆதியும் ஈறும் ஆனார்-அதிகைவீரட்டனாரே.

[7]
எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில் புக்கனர்; காமன் என்னும்
வில்லி ஐங்கணையினானை வெந்து உக நோக்கியிட்டார்
அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே.

[8]
எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில் புக்கனர்; காமன் என்னும்
வில்லி ஐங்கணையினானை வெந்து உக நோக்கியிட்டார்
அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே.

[9]
ஒன்றவே உணர்திர் ஆகில் ஓங்காரத்து ஒருவன் ஆகும்,
வென்ற ஐம்புலன்கள்தம்மை விலக்குதற்கு உரியீர் எல்லாம்;
நன் தவ நாரண(ன்) னும் நான்முகன் நாடிக் காண்குற்று
அன்று அவர்க்கு அரியர்போலும்- அதிகைவீரட்டனாரே.

[10]
தடக்கையால் எடுத்து வைத்துத் தடவரை குலுங்க ஆர்த்துக்
கிடக்கையால் இடர்கள் ஓங்கக் கிளர் மணி முடிகள் சாய
முடக்கினார், திருவிரல்தான்; முருகு அமர்கோதை பாகத்து
அடக்கினார்-என்னை ஆளும் அதிகைவீரட்டனாரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.026   நம்பனே! எங்கள் கோவே! நாதனே!  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
நம்பனே! எங்கள் கோவே! நாதனே! ஆதிமூர்த்தி!
பங்கனே! பரமயோகி! என்று என்றே பரவி நாளும்,
செம்பொனே! பவளக்குன்றே! திகழ் மலர்ப்பாதம் காண்பான்,
அன்பனே! அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே!

[1]
பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழ
மெய்யனாய் வாழமாட்டேன்; வேண்டிற்று ஒன்று ஐவர் வேண்டார்
செய்யதாமரைகள் அன்ன சேவடி இரண்டும் காண்பான்,
ஐய! நான் அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே!

[2]
நீதியால்வாழ மாட்டேன், நித்தலும்; தூயேன் அல்லேன்;
ஓதியும் உணரமாட்டேன்; உன்னை உள் வைக்கமாட்டேன்;
சோதியே! சுடரே! உன் தன் தூ மலர்ப்பாதம் காண்பான்,
ஆதியே! அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே!

[3]
தெருளுமா தெருள மாட்டேன்; தீவினைச் சுற்றம் என்னும்
பொருளுளே அழுந்தி, நாளும், போவது ஓர் நெறியும் காணேன்;
இருளும் மா மணிகண்டா! நின் இணை அடி இரண்டும் காண்பான்
அருளும் ஆறு அருளவேண்டும்- அதிகைவீரட்டனீரே!

[4]
அஞ்சினால் இயற்றப்பட்ட ஆக்கை பெற்று, அதனுள் வாழும்
அஞ்சினால் அடர்க்கப்பட்டு, இங்கு உழிதரும் ஆதனேனை,
அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு அச்சம் தீர்ந்தேன்
அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகைவீரட்டனீரே!

[5]
உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி,
மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும், நெஞ்சம்;
பெறு கயிறு ஊசல் போலப் பிறை புல்கு சடையாய்! பாதத்து
அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகைவீரட்டனீரே!

[6]
கழித்திலேன்; காமவெந்நோய்; காதன்மை என்னும் பாசம்
ஒழித்திலேன்; ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்து
விழித்திலேன்; வெளிறு தோன்ற வினை எனும் சரக்குக் கொண்டேன்;
அழித்திலேன்; அயர்த்துப் போனேன் அதிகை வீரட்டனீரே!

[7]
மன்றத்துப் புன்னை போல மரம் படு துயரம் எய்தி,
ஒன்றினால் உணரமாட்டேன்; உன்னை உள் வைக்க மாட்டேன்;
கன்றிய காலன் வந்து கருக்குழி விழுப்பதற்கே
அன்றினான்; அலமந்திட்டேன் அதிகைவீரட்டனீரே!

[8]
பிணி விடா ஆக்கை பெற்றேன்; பெற்றம் ஒன்று ஏறுவானே!
பணி விடா இடும்பை என்னும் பாசனத்து அழுந்துகின்றேன்;
துணிவு இலேன்; யன் அல்லேன்; தூ மலர்ப்பாதம் காண்பான்
அணியனாய் அறிய மாட்டேன் அதிகைவீரட்டனீரே!

[9]
திருவினாள் கொழுநனாரும், திசைமுகம் உடைய கோவும்,
இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணை அடி காணமாட்டா
ஒருவனே! எம்பிரானே! உன் திருப்பாதம் கண்பான்,
அருவனே! அருளவேண்டும்- அதிகைவீரட்டனீரே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.027   மடக்கினார்; புலியின்தோலை; மா மணி  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
மடக்கினார்; புலியின்தோலை; மா மணி நாகம் கச்சா
முடக்கினார்; முகிழ் வெண்திங்கள் மொய்சடைக் கற்றை தன் மேல்-
தொடக்கினார்; தொண்டைச் செவ்வாய்த் துடி இடைப் பரவை அல்குல்
அடக்கினார்-கெடில வேலி அதிகைவீரட்டனாரே.

[1]
சூடினார், கங்கையாளை; சூடிய துழனி கேட்டு அங்கு
ஊடினாள், நங்கையாளும்; ஊடலை ஒழிக்க வேண்டிப்
பாடினார், சாமவேதம்; பாடிய பாணியாலே
ஆடினார்-கெடில வேலி அதிகைவீரட்டனாரே.

[2]
கொம்பினார் குழைத்த வேனல் கோமகன் கோல நீர்மை
நம்பினார் காணல் ஆகா வகையது ஓர் நடலை செய்தார்
வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்த
அம்பினார்- கெடில வேலி அதிகைவீரட்டனாரே.

[3]
மறி படக் கிடந்த கையர், வளர் இள மங்கை பாகம்
செறி படக் கிடந்த செக்கர்ச் செழு மதிக்கொழுந்து சூடி,
பொறி படக் கிடந்த நாகம் புகை உமிழ்ந்துஅழல வீக்கி,
கிறிபட நடப்பர்போலும்-கெடில வீரட்டனாரே.

[4]
நரி வரால் கவ்வச் சென்று நல்-தசை இழந்தது ஒத்த,
தெரிவரால்,-மால் கொள் சிந்தை,-தீர்ப்பது ஓர் சிந்தைசெய்வார்
வரி வரால் உகளும் தெண் நீர்க் கழனி சூழ் பழன வேலி,
அரிவரால் வயல்கள் சூழ்ந்த, அதிகைவீரட்டனாரே.

[5]
புள் அலைத்து உண்ட ஓட்டில் உண்டு போய், பலா சங்க்கொம்பின்
சுள்ளலைச் சுடலை வெண் நீறு அணிந்தவர்-மணி வெள் ஏற்றுத்
துள்ளலைப் பாகன் தன்னைத் தொடர்ந்து இங்கே கிடக்கின்றேனை
அள்ளலைக் கடப்பித்து ஆளும் அதிகைவீரட்டனாரே.

[6]
நீறு இட்ட நுதலர்; வேலை நீலம் சேர் கண்டர்; மாதர்
கூறு இட்ட மெய்யர் ஆகி, கூறினார், ஆறும் நான்கும்;
கீறிட்ட திங்கள் சூடிக் கிளர்தரு சடையினுள்ளால்
ஆறு இட்டு முடிப்பர்போலும்-அதிகைவீரட்டனாரே.

[7]
காண் இலார் கருத்தில் வாரார்; திருத்தலார்; பொருத்தல் ஆகார்
ஏண் இலார்; இறப்பும் இல்லார்; பிறப்பு இலார்; துறக்கல் ஆகார்
நாண் இலார் ஐவரோடும் இட்டு எனை விரவி வைத்தார்
ஆண் அலார்; பெண்ணும் அல்லார்-அதிகைவீரட்டனாரே.

[8]
தீர்த்தம் ஆம் மலையை நோக்கிச் செரு வலி அரக்கன் சென்று
பேர்த்தலும், பேதை அஞ்ச, பெருவிரல் அதனை ஊன்றி,
சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து, அவனை அன்று(வ்)
ஆர்த்த வாய் அலற வைத்தார்-அதிகைவீரட்டனாரே.

[9]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.028   முன்பு எலாம் இளைய காலம்  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
முன்பு எலாம் இளைய காலம் மூர்த்தியை நினையாது ஓடி,
கண்கண இருமி, நாளும் கருத்து அழிந்து, அருத்தம் இன்றி,
பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன், உள்ளம்;
அன்பனாய் வாழமாட்டேன் அதிகைவீரட்டனீரே!

[1]
கறைப் பெருங் கண்டத்தானே! காய் கதிர் நமனை அஞ்சி
நிறைப் பெருங்கடலைக் கண்டேன்! நீள்வரை உச்சி கண்டேன்!
பிறைப் பெருஞ் சென்னியானே! பிஞ்ஞகா! இவை அனைத்தும்
அறுப்பது ஓர் உபாயம் காணேன் அதிகைவீரட்டனீரே!

[2]
நாதனார் என்ன, நாளும் நடுங்கினர் ஆகித் தங்கள்
ஏதங்கள் அறிய மாட்டார், இணை அடி தொழுதோம் என்பார்
ஆதன் ஆனவன் என்றுஎள்கி,- அதிகைவீரட்டனே!-நின்
பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினைப் பரிசு இலேனே.

[3]
சுடலை சேர் சுண்ண மெய்யர்; சுரும்பு உண விரிந்த கொன்றைப்-
படலை சேர் அலங்கல் மார்பர்-பழனம் சேர் கழனித் தெங்கின்
மடலை நீர் கிழிய ஓடி அதன் இடை மணிகள் சிந்தும்
கெடில வீரட்டம் மேய கிளர் சடைமுடியனாரே

[4]
மந்திரம் உள்ளது ஆக, மறி கடல் எழு நெய் ஆக,
இந்திரன் வேள்வித் தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம்
சிந்திரம் ஆக நோக்கிக் தெருட்டுவார்-தெருட்ட வந்து
கந்திரம் முரலும் சோலைக் கானல் அம் கெடிலத்தாரே

[5]
மைஞ்ஞலம் அனைய கண்ணாள் பங்கன் மாமலையை ஓடி,
மெய்ஞ் ஞரம்பு உதிரம் பில்க, விசை தணிந்து, அரக்கன் வீழ்ந்து,
கைஞ் ஞரம்பு எழுவிக் கொண்டு, காதலால் இனிது சொன்ன
கின்னரம் கேட்டு உகந்தார்-கெடில வீரட்டனாரே.

[6]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.104   மாசு இல் ஒள்வாள் போல்  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு நீலாயதாட்சியம்மை உடனுறை அருள்மிகு காயாரோகணேசுவரர் திருவடிகள் போற்றி )
மாசு இல் ஒள்வாள் போல் மறியும் மணி நீர்த் திரைத் தொகுதி
ஊசலை ஆடி அங்கு ஒண் சிறை அன்னம் உறங்கல் உற்றால்,
பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு,
வீசும் கெடில வடகரைத்தே-எந்தை வீரட்டமே.

[1]
பைங்கால்-தவளை பறை கொட்ட, பாசிலை நீர்ப் படுகர்
அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப, அருகு உலவும்
செங்கால் குருகு இவை சேரும் செறி கெடிலக் கரைத்தே-
வெங் கால் குரு சிலை வீரன் அருள் வைத்த வீரட்டமே.

[2]
அம் மலர்க் கண்ணியர் அஞ்சனம்,- செந்துவர்வாய் இளையார்-
வெம் முலைச் சாந்தம், விலை பெறு மாலை, எடுத்தவர்கள்,
தம் மருங்கிற்கு இரங்கார், தடந் தோள் மெலியக் குடைவார்
விம்மு புனல் கெடிலக் கரைத்தே-எந்தை வீரட்டமே.

[3]
மீன் உடைத் தண்புனல் வீரட்டரே! நும்மை வேண்டுகின்றது
யான் உடைச் சில்குறை ஒன்று உளதால்; நறுந்தண் எருக்கின்
தேன் உடைக் கொன்றைச் சடை உடைக் கங்கைத் திரை தவழும்
கூன் உடைத் திங்கள் குழவி எப்போதும் குறிக்கொண்மினே!

[4]
ஆர் அட்டதேனும் இரந்து, உண்டு, அகம் அகவன் திரிந்து,
வேர் அட்ட, நிற்பித்திடுகின்றதால்-விரிநீர்ப் பரவைச்
சூர் அட்ட வேலவன் தாதையை, சூழ் வயல் ஆர் அதிகை-
வீரட்டத்தானை, விரும்பா அரும்பாவவேதனையே.

[5]
படர் பொன்சடையும், பகுவாய் அரவும், பனிமதியும்,
சுடலைப் பொடியும், எல்லாம் உளவே; அவர் தூய தெண் நீர்க்
கெடிலக் கரைத் திரு வீரட்டர் ஆவர்; கெட்டேன்! அடைந்தார்
நடலைக்கு நல்-துணை ஆகும்கண்டீர், அவர் நாமங்களே.

[6]
காளம் கடந்தது ஓர் கண்டத்தர் ஆகிக் கண் ஆர் கெடில
நாள் அங்கடிக்கு ஓர் நகரமும், மாதிற்கு நன்கு இசைந்த
தாளங்கள் கொண்டும், குழல் கொண்டும், யாழ் கொண்டும், தாம் அங்ஙனே
வேடங்கள் கொண்டும், விசும்பு செல்வார் அவர்-வீரட்டரே.

[7]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.053   கோணல் மா மதி சூடி,  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
கோணல் மா மதி சூடி, ஓர் கோவண
நாண் இல் வாழ்க்கை நயந்தும், பயன் இலை;
பாணில் வீணை பயின்றவன் வீரட்டம்
காணில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

[1]
பண்ணினை, பவளத்திரள் மா மணி
அண்ணலை, அமரர்தொழும் ஆதியை,
சுண்ணவெண் பொடியான், திரு வீரட்டம்
நண்ணில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

[2]
உற்றவர்தம் உறு நோய் களைபவர்,
பெற்றம் ஏறும் பிறங்கு சடையினர்,
சுற்றும் பாய் புனல் சூழ் திரு வீரட்டம்
கற்கில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

[3]
முற்றா வெண்மதி சூடும் முதல்வனார்
செற்றார் வாழும் திரிபுரம் தீ எழ,
வில்-தான் கொண்டு எயில் எய்தவர்; வீரட்டம்
கற்றால் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

[4]
பல்லாரும் பலதேவர் பணிபவர்,
நல்லாரும் நயந்து ஏத்தப்படுபவன்,
வில்லால் மூஎயில் எய்தவன், வீரட்டம்
கல்லேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?

[5]
வண்டு ஆர் கொன்றையும் மத்தம்,-வளர்சடைக்
கொண்டான்,-கோல மதியோடு அரவமும்;
விண்டார் மும்மதில் எய்தவன்; வீரட்டம்
கண்டால் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

[6]
அரை ஆர் கோவண ஆடையன், ஆறு எலாம்
திரை ஆர் ஒண் புனல் பாய் கெடிலக் கரை-
விரை ஆர் நீற்றன் விளங்கு வீரட்டன்பால்
கரையேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?.

[7]
நீறு உடைத் தடந்தோள் உடை நின்மலன்,
ஆறு உடைப் புனல் பாய் கெடிலக் கரை
ஏறு உடைக் கொடியான்,-திரு வீரட்டம்
கூறில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

[8]
செங்கண் மால்விடை ஏறிய செல்வனார்,
பைங்கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர்,
அம் கண் ஞாலம் அது ஆகிய, வீரட்டம்,
கங்குல் ஆக, என் கண் துயில் கொள்ளுமே?

[9]
பூண், நாண், ஆரம், பொருந்த உடையவர்;
நாண் ஆக(வ்) வரைவில்லிடை அம்பினால்,
பேணார் மும்மதில் எய்தவன்; வீரட்டம்
காணேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?

[10]
வரை ஆர்ந்த(வ்) வயிரத்திரள் மாணிக்கம்
திரை ஆர்ந்த(ப்) புனல் பாய் கெடிலக் கரை
விரை ஆர் நீற்றன் விளங்கிய வீரட்டம்
உரையேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?

[11]
உலந்தார் வெண்தலை உண்கலன் ஆகவே,
வலம்தான் மிக்க அவ் வாள் அரக்கன்தனைச்
சிலம்பு ஆர் சேவடி ஊன்றினான் வீரட்டம்
புலம்பேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?

[12]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.054   எட்டு நாள்மலர் கொண்டு, அவன்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
எட்டு நாள்மலர் கொண்டு, அவன் சேவடி
மட்டு அலர், இடுவார் வினை மாயுமால்-
கட்டித் தேன் கலந்தன்ன கெடில வீ-
ரட்டனார் அடி சேருமவருக்கே.

[1]
நீளமா நினைந்து, எண் மலர் இட்டவர்
கோள வல்வினையும் குறைவிப்பரால்-
வாளமா இழியும் கெடிலக் கரை,
வேளி சூழ்ந்து, அழகு ஆய வீரட்டரே.

[2]
கள்ளின் நாள்மலர் ஓர் இரு-நான்கு கொண்டு,
உள்குவார் அவர் வல்வினை ஓட்டுவார்-
தெள்ளு நீர் வயல் பாய் கெடிலக் கரை,
வெள்ளை நீறு அணி மேனி, வீரட்டரே.

[3]
பூங்கொத்து ஆயின மூன்றொடு ஓர் ஐந்து இட்டு
வாங்கி நின்றவர் வல்வினை ஓட்டுவார்-
வீங்கு தண்புனல் பாய் கெடிலக் கரை,
வேங்கைத்தோல் உடை ஆடை, வீரட்டரே.

[4]
தேனப் போதுகள் மூன்றொடு ஓர் ஐந்து உடன்
தான் அப்போது இடுவார் வினை தீர்ப்பவர்-
மீனத் தண் புனல் பாய் கெடிலக் கரை,
வேனல் ஆனை உரித்த, வீரட்டரே.

[5]
ஏழித் தொல் மலர் கொண்டு பணிந்தவர்
ஊழித் தொல்வினை ஓட, அகற்றுவார்-
பாழித் தண்புனல் பாய் கெடிலக் கரை,
வேழத்தின்(ன்)உரி போர்த்த, வீரட்டரே.

[6]
உரைசெய் நூல்வழி ஒண்மலர் எட்டு இட,
திரைகள் போல் வரு வல்வினை தீர்ப்பரால்-
வரைகள் வந்து இழியும் கெடிலக் கரை,
விரைகள் சூழ்ந்து அழகுஆய, வீரட்டரே.

[7]
ஓலி வண்டு அறை ஒண்மலர் எட்டினால்
காலை ஏத்த வினையைக் கழிப்பரால்-
ஆலி வந்து இழியும் கெடிலக் கரை,
வேலி சூழ்ந்து அழகு ஆய, வீரட்டரே.

[8]
தாரித்து உள்ளி, தட மலர் எட்டினால்
பாரித்து ஏத்த, வல்லார் வினை பாற்றுவார்-
மூரித் தெண்திரை பாய் கெடிலக் கரை,
வேரிச் செஞ்சடை வேய்ந்த, வீரட்டரே.

[9]
அட்டபுட்பம் அவை கொளும் ஆறு கொண்டு,
அட்டமூர்த்தி அநாதிதன் பால் அணைந்து,
அட்டும் ஆறு செய்கிற்ப-அதிகை வீ-
ரட்டனார் அடி சேருமவர்களே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.003   வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை,  
பண் - ஏழைத்திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திருப்பாதிரிப்புலியூரில் சிலநாள் தங்கியிருந்தார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் திருவதிகை செல்லும் விருப்பமுடையவராய்த் திருமாணிகுழி, திருத் தினை நகர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு திருவதிகையை அடைந்தார். சமணர் இழைத்த துன்பங்களிலிருந்து திருவருளால் மீண்டு கடலில் கல்லே தெப்பமாகக் கரையேறிய திருநாவுக்கரசர் திருவதிகை எழுந்தருளுவது கேட்டு மக்கள் மகிழ்வோடு சிறந்த முறையில் அவரை வரவேற்றனர். தூயவெண்ணீறு துதைந்த பொன்மேனியும் தாழ் வடமும் நாயகன் சேவடி தைவரும் நெஞ்சும் நைந்துருகிப் பாய்வது போல் அன்புநீர் பொழிகண்ணும் பதிகச் செஞ்சொல்மேய செவ்வாயும் உடையராய் திருநாவுக்கரசர் அடியார் புடைசூழ திருவதிகைத் திரு வீதியுள் புகுந்து திருக்கோயிலை அடைந்து வெறிவிரவு கூவிளம் என்று தொடங்கும் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.
வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை, வெள் ஏற்றினானை,
பொறி அரவினானை, புள் ஊர்தியானை, பொன்நிறத்தினானை, புகழ் தக்கானை,
அறிதற்கு அரிய சீர் அம்மான் தன்னை, அதியரையமங்கை அமர்ந்தான் தன்னை,
எறி கெடிலத்தானை, இறைவன் தன்னை, - ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!

[1]
வெள்ளிக்குன்று அன்ன விடையான் தன்னை, வில்வலான் வில்வட்டம் காய்ந்தான் தன்னை,
புள்ளிவரிநாகம் பூண்டான் தன்னை, பொன்   பிதிர்ந்தன்ன சடையான் தன்னை,
வள்ளி வளைத் தோள் முதல்வன் தன்னை, வாரா   உலகு அருள வல்லான் தன்னை,
எள்க இடு பிச்சை ஏற்பான்தன்னை, - ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!

[2]
முந்தி உலகம் படைத்தான் தன்னை, மூவா முதல்   ஆய மூர்த்தி தன்னை,
சந்த வெண்திங்கள் அணிந்தான் தன்னை,   தவநெறிகள் சாதிக்க வல்லான்தன்னை,
சிந்தையில்-தீர்வினையை, தேனை, பாலை, செழுங்   கெடில வீரட்டம் மேவினானை,
எந்தை பெருமானை, ஈசன் தன்னை, -ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!

[3]
மந்திரமும், மறைப் பொருளும், ஆனான்தன்னை; மதியமும், ஞாயிறும், காற்றும், தீயும்,
அந்தரமும், அலைகடலும், ஆனான் தன்னை; அதியரையமங்கை அமர்ந்தான் தன்னை;
கந்தருவம் செய்து, இருவர், கழல் கைகூப்பி, கடிமலர்கள் பல தூவி, காலைமாலை.
இந்திரனும் வானவரும் தொழ, செல்வானை;- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!

[4]
ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார்; உயர்கதிக்கு வழி தேடிப் போகமாட்டார்;
வரு பிறப்பு ஒன்று உணராது, மாசு பூசி, வழி   காணாதவர் போல்வார் மனத்தன் ஆகி,
அரு பிறப்பை அறுப்பிக்கும் அதிகை ஊரன் அம்மான் தன் அடி இணையே அணைந்து வாழாது,
இருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!

[5]
ஆறு ஏற்க வல்ல சடையான் தன்னை; அஞ்சனம் போலும் மிடற்றான் தன்னை;
கூறு ஏற்க, கூறு அமர, வல்லான் தன்னை; கோல் வளைக்கை மாதராள் பாகன்தன்னை;
நீறு ஏற்கப் பூசும் அகலத்தானை; நின்மலன் தன்னை; நிமலன் தன்னை;
ஏறு ஏற்க ஏறுமா வல்லான் தன்னை;- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!

[6]
குண்டு ஆக்கனாய் உழன்று, கையில் உண்டு, குவிமுலையார்தம் முன்னே நாணம் இன்றி,
உண்டி உகந்து, அமணே நின்றார் சொல் கேட்டு,
 உடன் ஆகி, உழி தந்தேன், உணர்வு ஒன்று இன்றி;
வண்டு உலவு கொன்றை அம்கண்ணியானை,   வானவர்கள் ஏத்தப்படுவான் தன்னை,
எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான் தன்னை- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!

[7]
உறி முடித்த குண்டிகை தம் கையில்-தூக்கி,
ஊத்தைவாய்ச் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்க(ன்)னாய்,
கறி விரவு நெய் சோறு கையில் உண்டு, கண்டார்க்குப் பொல்லாத காட்சி ஆனேன்;
மறிதிரை நீர்ப்பவ்வம் நஞ்சு உண்டான் தன்னை, 
மறித்து ஒரு கால் வல்வினையேன், நினைக்க மாட்டேன்;
எறிகெடில நாடர் பெருமான் தன்னை-ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!.

[8]
நிறை ஆர்ந்த நீர்மை ஆய் நின்றான்தன்னை, நெற்றிமேல் கண் ஒன்று உடையான் தன்னை,
மறையானை, மாசு ஒன்று இலாதான் தன்னை, வானவர்மேல் மலர் அடியை வைத்தான் தன்னை,
கறையானை, காது ஆர் குழையான் தன்னை, கட்டங்கம் ஏந்திய கையான் தன்னை,
இறையானை, எந்தைபெருமான் தன்னை;- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!.

[9]
தொல்லை வான் சூழ் வினைகள் சூழப் போந்து தூற்றியேன்; ஆற்றியேன்; சுடர் ஆய் நின்று
வல்லையே இடர் தீர்த்து இங்கு அடிமைகொண்ட, வானவர்க்கும் தானவர்க்கும், பெருமான் தன்னை
கொல்லைவாய்க் குருந்து ஒசித்துக் குழலும் ஊதும் கோவலனும், நான்முகனும், கூடி எங்கும்
எல்லை காண்பு அரியானை; எம்மான் தன்னை;- ஏழையேன்நான் பண்டு இகழ்ந்த ஆறே!.

[10]
முலை மறைக்கப்பட்டு நீராடாப் பெண்கள் முறைமுறையால், நம் தெய்வம் என்று தீண்டி,
தலை பறிக்கும் தன்மையர்கள் ஆகி நின்று, தவமே என்று அவம் செய்து, தக்கது ஓரார்;
மலை மறிக்கச் சென்ற இலங்கைக் கோனை மதன் அழியச் செற்ற சேவடியினானை,
இலை மறித்த கொன்றை அம்தாரான் தன்னை,- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.004   சந்திரனை மா கங்கைத் திரையால்  
பண் - அடையாளத்திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
சந்திரனை மா கங்கைத் திரையால் மோதச் சடாமகுடத்து இருத்துமே; சாமவேத-
கந்தருவம் விரும்புமே; கபாலம் ஏந்து கையனே: மெய்யனே; கனகமேனிப்
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே; பசு ஏறுமே; பரமயோகி ஆமே;
ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்கு(ம்)மே;- அவன் ஆகில் அதிகை வீரட்டன் ஆமே.

[1]
ஏறு ஏறி ஏழ் உலகம் உழிதர்வானே; இமையவர்கள் தொழுது ஏத்த இருக்கின்றானே;
பாறு ஏறு படுதலையில் பலி கொள்வானே; பட அரவம் தடமார்பில் பயில்வித்தானே;
நீறு ஏறு செழும் பவளக்குன்று ஒப்பானே; நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே;
ஆறு ஏறு சடைமுடி மேல் பிறை வைத்தானே;-அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

[2]
முண்டத்தின் பொலிந்து இலங்கு நெற்றியானே; முதல் ஆகி நடு ஆகி முடிவு ஆனானே;
கண்டத்தில் வெண் மருப்பின் காறையானே; கதம் நாகம் கொண்டு ஆடும் காட்சியானே;
பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே; பெரு நிலம், நீர், தீ, வளி, ஆகாசம், ஆகி
அண்டத்துக்கு அப்பால் ஆய் இப் பாலானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

[3]
செய்யனே; கரியனே, கண்டம்; பைங்கண் வெள் எயிற்று ஆடு அரவனே; வினைகள் போக
வெய்யனே; தண் கொன்றை மிலைத்த சென்னிச் சடையனே; விளங்கு மழுச் சூலம் ஏந்தும்
கையனே; காலங்கள் மூன்று ஆனானே; கருப்பு வில் தனிக் கொடும் பூண் காமற் காய்ந்த
ஐயனே; பருத்து உயர்ந்த ஆன் ஏற்றானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

[4]
பாடுமே, ஒழியாமே நால்வேத(ம்)மும்; படர்சடைமேல் ஒளி திகழப் பனி வெண்திங்கள்
சூடுமே; அரை திகழத் தோலும் பாம்பும் சுற்றுமே; தொண்டைவாய் உமை ஓர் பாகம்
கூடுமே; குடமுழவம், வீணை, தாளம், குறுநடைய சிறு பூதம் முழக்க, மாக்கூத்து
ஆடுமே; அம் தடக்கை அனல் ஏந்து(ம்)மே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

[5]
ஒழித்திடுமே, உள்குவார் உள்ளத்து உள்ள உறு பிணியும் செறு பகையும்; ஒற்றைக்கண்ணால்
விழித்திடுமே, காமனையும் பொடி ஆய் வீழ; வெள்ளப் புனல் கங்கை செஞ்சடைமேல்
இழித்திடுமே; ஏழ் உலகும் தான் ஆகு(ம்)மே; இயங்கும் திரிபுரங்கள் ஓர் அம்பி(ன்)னால்
அழித்திடுமே; ஆதி மா தவத்து உளானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

[6]
குழலோடு, கொக்கரை, கைத்தாளம், மொந்தை, குறள்பூதம் முன் பாடத் தான் ஆடு(ம்)மே;
கழல் ஆடு திருவிரலால் கரணம்செய்து, கனவின் கண் திரு உருவம் தான் காட்டு(ம்)மே;
எழில் ஆரும் தோள் வீசி நடம் ஆடு(ம்)மே;- ஈமப் புறங்காட்டில் ஏமம்தோறும்
அழல் ஆடுமே அட்டமூர்த்தி ஆமே;-அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

[7]
மால் ஆகி மதம் மிக்க களிறுதன்னை வதைசெய்து, மற்று அதனின் உரிவை கொண்டு,
மேலாலும் கீழாலும் தோன்றா வண்ணம், வெம் புலால் கை கலக்க, மெய் போர்த்தானே;
கோலாலம் பட வரை நட்டு, அரவு சுற்றி, குரைகடலைத் திரை அலற, கடைந்து கொண்ட
ஆலாலம் உண்டு இருண்ட கண்டத்தானே;-அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

[8]
செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும் செஞ்சடை எம்பெருமானே; தெய்வம் நாறும்
வம்பின் நாள்மலர்க் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே; வலங்கை மழுவாள(ன்)னே:
நம்பனே; நால்மறைகள் தொழ நின்றானே; நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்கச் செற்ற
அம்பனே; அண்ட கோசத்து உளானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

[9]
எழுந்த திரை நதித் துவலை நனைந்த திங்கள் இளநிலாத் திகழ்கின்ற வளர்சடையனே;
கொழும் பவளச்செங்கனிவாய்க் காமக்கோட்டி
கொங்கை இணை அமர் பொருது கோலம் கொண்ட
தழும்பு உளவே; வரைமார்பில் வெண்நூல் உண்டே; சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
அழுந்திய செந்திரு உருவில் வெண் நீற்றானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

[10]
நெடியானும் நான்முகனும் நேடிக் காணா நீண்டானே; நேர் ஒருவர் இல்லாதானே;
கொடி ஏறு கோல மா மணிகண்ட(ன்)னே; கொல் வேங்கை அதளனே; கோவணவனே;
பொடி ஏறு மேனியனே; ஐயம் வேண்டிப் புவலோகம் திரியுமே; புரிநூலானே;
அடியாரை அமருலகம் ஆள்விக்கு(ம்)மே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.005   எல்லாம் சிவன் என்ன நின்றாய்,  
பண் - போற்றித்திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

சிவார்ச்சனை ‌ ‌
எல்லாம் சிவன் என்ன நின்றாய், போற்றி!
எரிசுடர் ஆய் நின்ற இறைவா, போற்றி!
கொல் ஆர் மழுவாள்படையாய், போற்றி!
கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய், போற்றி!
கல்லாதார் காட்சிக்கு அரியாய், போற்றி!
கற்றார் இடும்பை களைவாய், போற்றி!
வில்லால் வியன் அரணம் எய்தாய், போற்றி!
வீரட்டம் காதல் விமலா, போற்றி!.

[1]
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா, போற்றி!
பல் ஊழி ஆய படைத்தாய், போற்றி!
ஓட்டு அகத்தே ஊணா உகந்தாய், போற்றி!
உள்குவார் உள்ளத்து உறைவாய், போற்றி!
காட்டு அகத்தே ஆடல் மகிழ்ந்தாய், போற்றி!
கார்மேகம் அன்ன மிடற்றாய், போற்றி!
ஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

[2]
முல்லை அம் கண்ணி முடியாய், போற்றி!
முழுநீறு பூசிய மூர்த்தி, போற்றி!
எல்லை நிறைந்த குணத்தாய், போற்றி!
ஏழ் நரம்பின் ஓசை படைத்தாய், போற்றி!
சில்லை சிரைத்தலையில் ஊணா, போற்றி!
சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய், போற்றி!
தில்லைச் சிற்றம்பலம் மேயாய், போற்றி!
திரு வீரட்டானத்து எம் செல்வா, போற்றி!.

[3]
சாம்பர் அகலத்து அணிந்தாய், போற்றி!
தவநெறிகள் சாதித்து நின்றாய், போற்றி!
கூம்பித் தொழுவார் தம் குற்றேவ(ல்)லைக்
குறிக்கொண்டு இருக்கும் குழகா, போற்றி!
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து
உடன் வைத்த பண்பா, போற்றி!
ஆம்பல்மலர் கொண்டு அணிந்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

[4]
நீறு ஏறு நீலமிடற்றாய், போற்றி!
நிழல் திகழும் வெண்மழுவாள் வைத்தாய், போற்றி!
கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய், போற்றி!
கோள் அரவம் ஆட்டும் குழகா, போற்றி!
ஆறு ஏறு சென்னி உடையாய், போற்றி!
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
ஏறு ஏற என்றும் உகப்பாய், போற்றி!
இருங் கெடில வீரட்டத்து எந்தாய், போற்றி!.

[5]
பாடுவார் பாடல் உகப்பாய், போற்றி!
பழையாற்றுப் பட்டீச்சுரத்தாய், போற்றி!
வீடுவார் வீடு அருள வல்லாய், போற்றி!
வேழத்து உரி வெருவப் போர்த்தாய், போற்றி!
நாடுவார் நாடற்கு அரியாய், போற்றி!
நாகம் அரைக்கு அசைத்த நம்பா, போற்றி!
ஆடும் ஆன் அஞ்சு உகப்பாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

[6]
மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய், போற்றி!
மால்கடலும் மால்விசும்பும் ஆனாய், போற்றி!
விண் துளங்க மும்மதிலும் எய்தாய், போற்றி!
வேழத்து உரி மூடும் விகிர்தா, போற்றி!
பண் துளங்கப் பாடல் பயின்றாய், போற்றி!
பார் முழுதும் ஆய பரமா, போற்றி!
கண் துளங்கக் காமனை முன் காய்ந்தாய், போற்றி!
கார்க் கெடிலம் கொண்ட கபாலீ, போற்றி!.

[7]
வெஞ்சின வெள் ஏறு ஊர்தி உடையாய், போற்றி!
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய், போற்றி!
துஞ்சாப் பலிதேரும் தோன்றால், போற்றி!
தொழுத கை துன்பம் துடைப்பாய், போற்றி!
நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா, போற்றி!
நால்மறையோடு ஆறு அங்கம் ஆனாய், போற்றி!
அம் சொலாள் பாகம் அமர்ந்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

[8]
சிந்தை ஆய் நின்ற சிவனே, போற்றி!
சீபர்ப்பதம் சிந்தைசெய்தாய், போற்றி!
புந்தி ஆய்ப் புண்டரிகத்து உள்ளாய், போற்றி!
புண்ணியனே, போற்றி! புனிதா, போற்றி!
சந்திஆய் நின்ற சதுரா, போற்றி!
தத்துவனே, போற்றி! என் தாதாய், போற்றி!
அந்தி ஆய் நின்ற அரனே, போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

[9]
முக்கணா, போற்றி! முதல்வா, போற்றி!
முருகவேள்தன்னைப் பயந்தாய், போற்றி!
தக்கணா, போற்றி! தருமா, போற்றி!
தத்துவனே, போற்றி! என் தாதாய் போற்றி!
தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப,
துளங்காது எரிசுடர் ஆய் நின்றாய், போற்றி!
எக்கண்ணும் கண் இலேன்; எந்தாய், போற்றி!
எறி செடில வீரட்டத்து ஈசா, போற்றி!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.006   அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்)  
பண் - குறிஞ்சி   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்) அடி;
அருமறையான் சென்னிக்கு அணி ஆம் அடி;
சரவணத்தான் கைதொழுது சாரும்(ம்) அடி;
சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி;
பரவுவார் பாவம் பறைக்கும்(ம்) அடி;
பதினெண்கணங்களும் பாடும்(ம்) அடி;
திரை விரவு தென் கெடில நாடன்(ன்)அடி
திருவீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.

[1]
கொடுவினையார் என்றும் குறுகா அடி;
குறைந்துஅடைந்தார் ஆழாமைக் காக்கும்(ம்) அடி;
படு முழவம் பாணி பயிற்றும்(ம்) அடி;
பதைத்து எழுந்த வெங் கூற்றைப் பாய்ந்த(வ்) அடி;
கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல்சேவடி;
கடல் வையம் காப்பான் கருதும்(ம்) அடி;
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி
நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி.

[2]
வைது எழுவார் காமம், பொய், போகா அடி;
வஞ்சவலைப்பாடு ஒன்று இல்லா அடி;
கைதொழுது நாம் ஏத்திக் காணும்(ம்) அடி;
கணக்கு வழக்கைக் கடந்த(வ்) அடி;
நெய்-தொழுது, நாம் ஏத்தி-ஆட்டும்(ம்) அடி; நீள்
விசும்பை ஊடு அறுத்து நின்ற(வ்) அடி;
தெய்வப்புனல் கெடில நாடன்(ன்) அடி-திரு
வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி;

[3]
அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும்(ம்) அடி;
அழகு எழுதல் ஆகா அருள் சேவடி;
சுரும்பித்த வண்டு இனங்கள் சூழ்ந்த(வ்) அடி;
சோமனையும் காலனையும் காய்ந்தவ(வ்) அடி;
பெரும் பித்தர் கூடிப் பிதற்றும்(ம்) அடி;
பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல(வ்) அடி;
திருந்து நீர்த் தென்கெடில நாடன்(ன்) அடி
திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.

[4]
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற(வ்) அடி;
 ஊழிதோறுஊழி உயர்ந்த(வ்) அடி;
பொரு கழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்(ம்) அடி;
புகழ்வார் புகழ் தகைய வல்ல(வ்) அடி;
இரு நிலத்தார் இன்பு உற்று அங்கு ஏத்தும்(ம்) அடி;
இன்பு உற்றார் இட்ட பூ ஏறும்(ம்) அடி;
திரு அதிகைத் தென்கெடில நாடன்(ன்) அடி-திரு
 வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.

[5]
திருமகட்குச் செந்தாமரை ஆம் அடி;
சிறந்தவர்க்குத் தேன் ஆய் விளைக்கும்(ம்) அடி;
பொருளவர்க்குப் பொன் உரை ஆய் நின்ற(வ்)
அடி; புகழ்வார் புகழ் தகைய வல்ல(வ்) அடி;
உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி;
 உரு என்று உணரப்படாத(வ்)அடி;
திரு அதிகைத் தென் கெடில நாடன்(ன்) அடி-திரு
வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.

[6]
உரைமாலைஎல்லாம் உடைய(வ்) அடி;
உரையால் உணரப்படாத(வ்) அடி;
வரைமாதை வாடாமை வைக்கும்(ம்) அடி;
வானவர்கள்   தாம் வணங்கி வாழ்த்தும்(ம்) அடி;
அரைமாத்திரையில் அடங்கும்(ம்) அடி;
அகலம் அளக்கிற்பார் இல்லா அடி;
கரை மாங் கலிக் கெடில நாடன்(ன்) அடி
கமழ் வீரட்டானக் காபாலி(ய்) அடி;

[7]
நறுமலர் ஆய் நாறும் மலர்ச்சேவடி;
நடு ஆய்  உலகம் நாடு ஆய(வ்) அடி;
செறிகதிரும் திங்களும் ஆய் நின்ற(வ்) அடி;
தீத்திரள் ஆய் உள்ளே திகழ்ந்த(வ்) அடி;
மறு மதியை மாசு கழுவும்(ம்) அடி;
மந்திரமும் தந்திரமும் ஆய(வ்) அடி;
செறி கெடில நாடர் பெருமான் அடி
திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.

[8]
அணியனவும் சேயனவும் அல்லா அடி;
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆய(வ்) அடி;
பணிபவர்க்குப் பாங்கு ஆக வல்ல(வ்) அடி;  
பற்று அற்றார் பற்றும் பவள(வ்) அடி;
மணி அடி; பொன் அடி; மாண்பு ஆம் அடி;
மருந்து ஆய்ப் பிணி தீர்க்க வல்ல(வ்) அடி;
தணிபு ஆடு தண்கெடில நாடன்(ன்) அடி
தகை சார் வீரட்டத் தலைவன்(ன்) அடி;,

[9]
அம் தாமரைப்போது அலர்ந்த(வ்) அடி;
  அரக்கனையும் ஆற்றல் அழித்த(வ்) அடி;
முந்துஆகி முன்னே முளைத்த(வ்) அடி; முழங்கு
அழல் ஆய் நீண்ட எம் மூர்த்தி(ய்) அடி;
பந்து ஆடு மெல்விரலாள் பாகன்(ன்) அடி;
பவளத்தடவரையே போல்வான் அடி;
வெந்தார் சுடலை நீறு ஆடும்(ம்) அடி-வீரட்டம்
காதல் விமலன்(ன்) அடி.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.007   செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,  
பண் - காப்புத்திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
சிற்றேமமும், பெருந் தண் குற்றால(ம்)மும்,
தில்லைச் சிற்றம்பலமும், தென்கூட(ல்)லும்,
தென் ஆனைக்காவும், சிராப்பள்ளி(ய்)யும்,
நல்லூரும், தேவன்குடி, மருக(ல்)லும்,
  நல்லவர்கள் தொழுது ஏத்தும் நாரையூரும்-
கல்லலகு நெடும்புருவக் கபாலம் ஏந்திக்
கட்டங்கத்தோடு உறைவார் காப்புக்களே.

[1]
தீர்த்தப்புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
திருக்கோவல்வீரட்டம், வெண்ணெய் நல்லூர்,
ஆர்த்து அருவி வீழ் சுனைநீர் அண்ணாமலை,
அறையணி நல்லூரும்(ம்), அரநெறியும், -
ஏத்துமின்கள்! நீர் ஏத்த நின்ற ஈசன் இடைமருது,
இன்னம்பர், ஏகம்ப(ம்) மும்,
கார்த் தயங்கு சோலைக் கயிலாய (ம்)
  மும்-கண்நுதலான் தன்னுடைய காப்புக்களே.

[2]
சிறை ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திருப் பாதிரிப்புலியூர், திரு ஆமாத்தூர்,
துறை ஆர் வன முனிகள் ஏத்த நின்ற
சோற்றுத்துறை, துருத்தி, நெய்த்தான(ம்)மும், -
அறை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் ஐயாற்று
  அமுதர்-பழனம், நல்லம்,
கறை ஆர் பொழில் புடை சூழ் கானப்பேரும்,
  கழுக்குன்றும்-தம்முடைய காப்புக்களே.

[3]
திரை ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரு
 ஆரூர், தேவூர், திரு நெல்லிக்கா,
உரையார் தொழ நின்ற ஒற்றியூரும், ஓத்தூரும்,
மாற்பேறும், மாந்துறையும்,
வரை ஆர் அருவி சூழ் மாநதியும், மாகாளம்,
கேதாரம், மா மேரு(வ்)வும்-
கரை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் கடம்பந்துறை
உறைவார் காப்புக்களே.

[4]
செழு நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
  திரிபுராந்தகம், தென் ஆர் தேவீச்சுரம்,
கொழு நீர் புடை சுழிக்கும் கோட்டுக்காவும்,
குடமூக்கும், கோகரணம், கோலக்காவும்,
பழி நீர்மை இல்லாப் பனங்காட்டூரும், பனையூர்,
பயற்றூர், பராய்த்துறையும்,
கழுநீர் மது விரியும் காளிங்க(ம்)மும் - 
கணபதீச்சுரத்தார் தம் காப்புக்களே.

[5]
தெய்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும், செழுந்
தண் பிடவூரும், சென்று நின்று
பவ்வம் திரியும் பருப்பத(ம்)மும், பறியலூர்
  வீரட்டம், பாவநாசம்,
மவ்வம் திரையும் மணி முத்த(ம்)மும்,
 மறைக்காடும், வாய்மூர், வலஞ்சுழி(ய்)யும்,
கவ்வை வரிவண்டு பண்ணேபாடும்
 கழிப்பாலை-தம்முடைய காப்புக்களே.

[6]
தெண் நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
 தீக்காலிவல்லம், திரு வேட்டி(ய்)யும்,
உண் நீர் ஆர் ஏடகமும், ஊறல், அம்பர்,
  உறையூர், நறையூர், அரண நல்லூர்,
விண்ணார் விடையான் விளமர், வெண்ணி,
  மீயச்சூர், வீழிமிழலை, மிக்க
கண் ஆர் நுதலார் கரபுர(ம்)மும்-காபாலியார்
அவர்தம் காப்புக்களே.

[7]
தெள்ளும் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
  திண்டீச்சுரமும், திருப்புக(ல்)லூர்,
எள்ளும் படையான் இடைத்தான(ம்)மும்,
ஏயீச்சுரமும், நல் ஏமம், கூடல்,
கொள்ளும் இலயத்தார் கோடிகாவும், குரங்கணில்
 முட்டமும், குறும்பலாவும்,
கள் அருந்தத் தெள்ளியார் உள்கி ஏத்தும்
 காரோணம்-தம்முடைய காப்புக்களே.

[8]
சீர் ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
  திருக்காட்டுப்பள்ளி, திரு வெண்காடும்,
பாரார் பரவும் சீர்ப் பைஞ்ஞீலியும்,
  பந்தணைநல்லூரும், பாசூர், நல்லம்,
நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும்,
 நெடுங்களமும், நெல்வெண்ணெய், நெல்வாயி(ல்)லும்,
கார் ஆர் கமழ் கொன்றைத்தாரார்க்கு 
என்றும்-கடவூரில் வீரட்டம்-காப்புக்களே.

[9]
சிந்தும் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரு
வாஞ்சியமும், திரு நள்ளாறும்,
அம் தண்பொழில் புடை சூழ் அயோகந்தியும்,
ஆக்கூரும், ஆவூரும், ஆன்பட்டி(ய்)யும்,
எம்தம் பெருமாற்கு இடம் ஆவது(வ்)
 இடைச்சுரமும், எந்தை தலைச்சங்காடும்,
கந்தம் கமழும் கரவீர(ம்)மும், கடம்பூர்க்
கரக்கோயில்-காப்புக்களே.

[10]
தேன் ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திருச்
செம்பொன்பள்ளி, திருப் பூவணமும்,
வானோர் வணங்கும் மணஞ்சேரி(ய்)யும்,
மதில் உஞ்சைமாகாளம், வாரணாசி,
ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சுரம், இலங்கு
  ஆர் பருப்பதத்தோடு, ஏண் ஆர் சோலைக்
கான் ஆர் மயில் ஆர் கருமாரி(ய்)யும் - 
கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே.

[11]
திரு நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரு
  அளப்பூர், தெற்கு ஏறு சித்தவடம்,
உரு நீர் வளம் பெருகு மா நிருப(ம்)மும் -
மயிலாப்பில் மன்னினார், மன்னி ஏத்தும்
பெருநீர் வளர்சடையான் பேணி நின்ற -
  பிரமபுரம், சுழியல், பெண்ணாகடம்
கருநீலவண்டு அரற்றும் காளத்தி(ய்)யும்,
 கயிலாயம்-தம்முடைய காப்புக்களே.

[12]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.038   தம்மானை அறியாத சாதியார் உளரே?  
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
திருவதிகை திருநாவுக்கரசர் உழவாரத் திருப்பணி செய்யப் பெற்ற தலம். ஆதலால் அதனை மிதித்துச் செல்ல விரும்பாது அருகில் இருந்த சித்தவடம் என்னும் மடத்தில் தங்கினார். உடன் வந்த அடியார்களோடு அதிகை வீரட்டானேஸ்வரரை இடைவிடாது எண்ணிய வண்ணம் துயின்றார். இறைவன் முதிய அந்தணர் வடிவம் பூண்டு யாரும் அறியாதபடி புகுந்து சுந்தரர் தலையின் மேலே தமது திருவடி படும்படியாக வைத்துத் துயில் கொள்வாரைப் போன்று இருந்தார். உடனே நம்பியாரூரர் விழித்து எழுந்து அருமறை யோனே! உன் அடிகளை என் தலைமேல் வைத்தனையே என்று கேட்டார். நீர் துயிலும் திசையை அறியாவகை செய்தது என் முதுமை என்றார் அந்தணர். நம்பிகள் வேறொரு திசையில் தலையினை வைத்துத் துயில்கொள்ளத் தொடங்கினார். மீண்டும் அம் முதியவர் நாவலூரர் தலைமேல் தம் திருவடிகளை நீட்டிப் பள்ளி கொண்டார். நாவலூரர் எழுந்து இவ்வாறு பலதடவை மிதிக்கும் நீர் யார் என்று சினந்து கேட்டார். உடனே முதியவர் என்னை நீ இன்னும் அறிந்திலையோ என்று கூறியவாறு மறைந்தருளினார். அம்மொழி கேட்ட ஆரூரர் தம் முடியில் திருவடி வைத்தருளியவர் சிவபிரானே என்று தெளிந்து தம் பொருட்டு எளிவந்தருளிய எம்பெருமானைக் காணப்பெற்றும் அறியாமையால் இறுமாந்து இகழ்ந்துரைத்தேனே என்று வருந்தித் தம்மானை அறியாத சாதியார் உளரே என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித்துதித்தார்.
தம்மானை அறியாத சாதியார் உளரே? சடைமேல் கொள் பிறையானை, விடை மேற்கொள் விகிர்தன்,
கைம்மாவின் உரியானை, கரிகாட்டில் ஆடல் உடையானை, விடையானை, கறை  கொண்ட கண்டத்து
அம்மான் தன் அடிக் கொண்டு என் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால்  வாழ்கின்ற அறிவு இலா நாயேன்-
எம்மானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறை போதும் இகழ்வன் போல்  யானே! .

[1]
முன்னே எம்பெருமானை மறந்து என்கொல்? மறவா-தொழிந்து என்கொல்? மறவாத  சிந்தையால் வாழ்வேன்;
பொன்னே! நல்மணியே! வெண் முத்தே! செய் பவளக் குன்றமே! ஈசன்! என்று உன்னையே  புகழ்வேன்;
அன்னே! என் அத்தா! என்று அமரரால் அமரப் படுவானை, அதிகை மா நகருள்  வாழ்பவனை,
என்னே! என் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல்  யானே! .

[2]
விரும்பினேற்கு எனது உள்ளம் விடகிலா விதியே! விண்ணவர் தம் பெருமானே!   மண்ணவர் நின்று ஏத்தும்
கரும்பே! என் கட்டி! என்று உள்ளத்தால் உள்கி, காதல் சேர் மாதராள் கங்கையாள் நங்கை
வரும் புனலும் சடைக்கு அணிந்து, வளராத பிறையும் வரி அரவும் உடன் துயில வைத்து    அருளும் எந்தை,
இரும் புனல் வந்து எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன்    போல் யானே! .

[3]
நால்-தானத்து ஒருவனை, நான் ஆய பரனை, நள்ளாற்று நம்பியை, வெள்ளாற்று விதியை,
காற்றானை, தீயானை, கடலானை, மலையின் தலையானை, கடுங் கலுழிக் கங்கை நீர் வெள்ள-
ஆற்றானை, பிறையானை, அம்மானை, எம்மான்தம்மானை, யாவர்க்கும் அறிவு அரிய செங்கண்
ஏற்றானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .

[4]
சேந்தர் தாய் மலைமங்கை திருநிறமும் பரிவும் உடையானை, அதிகை மா நகருள்   வாழ்பவனை,
கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் சடை இடையில் கயல் இனங்கள்   குதி கொள்ளக் குலாவி,
வாய்ந்த நீர் வர உந்தி மராமரங்கள் வணக்கி, மறிகடலை இடம் கொள்வான் மலை ஆரம் வாரி
ஏந்து நீர் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .

[5]
மைம் மான மணிநீல கண்டத்து எம்பெருமான், வல் ஏனக் கொம்பு அணிந்த மா தவனை,   வானோர்-
தம்மானை, தலைமகனை, தண் மதியும் பாம்பும் தடுமாறும் சடையானை, தாழ்வரைக்கை   வென்ற
வெம் மான மதகரியின் உரியானை, வேத-விதியானை, வெண்நீறு சண்ணித்த மேனி
எம்மானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல்   யானே! .

[6]
வெய்து ஆய வினைக்கடலில் தடுமாறும் உயிர்க்கு மிக இரங்கி, அருள் புரிந்து, வீடு பேறு       ஆக்கம்
பெய்தானை, பிஞ்ஞகனை, மைஞ் ஞவிலும் கண்டத்து எண்தோள் எம்பெருமானை,  பெண்பாகம் ஒருபால்
செய்தானை, செக்கர் வான் ஒளியானை, தீ வாய் அரவு ஆடு சடையானை, திரிபுரங்கள் வேவ
எய்தானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல்   யானே! .

[7]
பொன்னானை, மயில் ஊர்தி முருகவேள் தாதை, பொடி ஆடு திருமேனி, நெடுமால் தன்    முடிமேல்-
தென்னானை, குடபாலின் வடபாலின் குணபால் சேராத சிந்தையான், செக்கர்வான் அந்தி
அன்னானை, அமரர்கள் தம் பெருமானை, கருமான் உரியானை, அதிகை மா நகருள் வாழ்பவனை,
என்னானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .

[8]
திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவச் சிலை வளைவித்து, ஒரு கணையால்-   தொழில் பூண்ட சிவனை,
கருந் தான மதகளிற்றின் உரியானை, பெரிய கண் மூன்றும் உடையானை, கருதாத  அரக்கன்
பெருந்தோள்கள் நால்-ஐந்தும், ஈர்-ஐந்து முடியும், உடையானைப் பேய் உருவம் ஊன்றும் உற   மலை மேல்
இருந்தானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல்   யானே! .

[9]
என்பினையே கலன் ஆக அணிந்தானை, எங்கள் எருது ஏறும் பெருமானை, இசை      ஞானி சிறுவன்-
வன் பனைய வளர் பொழில் சூழ் வயல் நாவலூர்க்கோன், வன்தொண்டன், ஆரூரன்-   மதியாது சொன்ன
அன்பனை, யாவர்க்கும் அறிவு அரிய அத்தர்-பெருமானை, அதிகை மா நகருள்    வாழ்பவனை,
என் பொன்னை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன்  போல் யானே! .

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list